அண்டை மாநிலங்கள்; அரசியல் வாரிசுகள்

Tamil_News_large_2312541

ஒரே நாள் ; ஒரே மாதிரியான நியமனம் ; ஒரே தகுதி என்று பல்வேறு ஒற்றுமைகளுடன் அரசியல் வாரிசுகள் இருவர் அண்டை மாநிலங்களில் பதவி ஏற்றுள்ளனர். இது இந்தியாவில் வாரிசு அரசியலின் பிடிமானத்தை காட்டுவதாக உள்ளது.

இன்று (ஜூலை 4 ) தி.மு.க.,வின் மூன்றாம் தலைமுறை அரசியல் வாரிசாக, உதயநிதி, அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் என்று சினிமா பிரபலமாக முதலில் அறியப்பட்டு பின்னர் குறுகிய காலத்தில் தி.மு.க.,வில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி பதவிக்கு வந்துள்ளார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் என்பதை தாண்டி குறிப்பிட்டுச் சொல்லும் அரசியல் அனுபவம் இல்லாதவர். இது தமிழகத்தில், தி.மு.க.,வின் குடும்ப அரசியல் தொடர்வதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க.,வை போன்றே, அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை நடத்தி வருபவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா. இவரும் மறைந்த கருணாநிதி போன்றே மூத்த அரசியல் தலைவர். அவருக்கு பின்னர் அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

அதாவது தற்போதைய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணியின் முதல்வர் அவர் தான். அவரது மகன் நிகில் குமாரசாமி சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றிபெற்றார். நிகிலும் அவர்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

நிகில் குமாரசாமியும், உதயநிதியை போன்றே மூன்றாவது தலைமுறை அரசியல் வாரிசு. நிகிலும் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடிப்பவர். நிகிலும், உதயநிதியும் இளைஞர்கள். இருவருமே தங்கள் குடும்ப கட்சியின் இளைஞர் அணியில் நியமிக்கப்பட்டுள்ளது, தென் மாநிலங்களின் வாரிசு அரசியலை பட்டவர்த்தமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இரு அண்டை மாநிலங்களில் இருவேறு குடும்பங்களில் இருவேறு கட்சிகளில் ஆனால் ஒரேநாளில் பதவிக்கு நியமிக்கப்படுவது திட்டமிடப்பட்ட நிகழ்வா, தற்செயலானதா என்பது தான் தெரியவில்லை என்று சிரிக்கின்றனர், தி.முக., சீனியர் சிலர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »