ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் : குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து

201907121039495718_Atthivarathar-in-orange-silk-decoration-By-the-arrival-of_SECVPF.gif

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப்பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். அதன்படி பன்னிரெண்டாம் நாளான இன்று, அத்திவரதருக்கு ஆரஞ்சு நிறப்பட்டு ஆடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 
காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, குடியரசு தலைவர் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய வருவதால், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை, பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம் என்றும், கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »