ஈஷாவில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இன்னர் இன்ஜினியரிங் யோகா வகுப்பு

isha

கோவை ஈஷா யோகா மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரத்யேகமாக ’இன்னர் இன்ஜினியரிங்’ என்ற யோகா வகுப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிராந்திய தலைமையகங்களில் இருந்து மேஜர் ஜெனரல், லெப்டினெண்ட் ஜெனரல், பிரிகேடியர், கர்னல் ஆகிய உயர் பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என மொத்தம் 55 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா’ என்ற தொன்மையான மற்றும் சக்திவாய்ந்த தியானப் பயிற்சிக்கு தீட்சை அளிக்கப்பட்டது. மேலும், ஈஷா உப-யோகா பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா வித்யா பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ராணுவ அதிகாரிகள் கலந்துரையாடினர். மேலும், புகழ்பெற்ற 112 அடி ஆதியோகியையும் தரிசனம் செய்தனர்.

இவ்வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ பயிற்சியை தினமும் செய்து வந்தால் மன அழுத்தம் குறைதல், ஆரோக்கியம் மேம்படுதல், கட்டாய பழக்கவழக்கங்களில் இருந்து விடுப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பலன்களை பெற முடியும்.

இந்த பிரத்யேக பயிற்சி வகுப்பு தொடர்பாக சத்குரு வெளியிட்ட செய்தியில், “ இந்த உள்நிலை ஆரோக்கியத்துக்கான இந்த தொழில்நுட்பத்தை ராணுவ அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்தி தங்களை உறுதிப்படுத்தி கொண்டு தேசத்துக்கு சிறப்பாக சேவை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த 5 நாள் வகுப்பின் அனுபவங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் பகிர்ந்துகொள்ளும் போது, “இவ்வகுப்பு தங்களுக்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்“ என்று தெரிவித்தனர்.

2018-ம் ஆண்டு லே மற்றும் சியாச்சினுக்கும் 2019-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுக்கும் சென்ற சத்குரு ராணுவ அதிகாரிகளுடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »