காசநோயாளிகள் மாத்திரை சாப்பிடும் காலத்தில் புரத உணவுகள் உட்கொள்ள வேண்டும் – துணை இயக்குநர் அறிவுரை

kvp

கடலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கீழஈரால் காசநோய் அலகின் சார்பாக கடலையூர் மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன் வரவேற்று பேசினார். மருத்துவ பணிகள்(காசம்)க்கான தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் க.சுந்தரலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேலும் அவர் நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கி பேசினார்.

’’காசநோயாளிகள் மாத்திரை உட்கொள்ளும் காலத்தில் உணவுடன் புரதம் சார்ந்த உணவுகள் தினமும் உட்கொள்ள வேண்டும்’’ என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை குறித்தும் பேசினார். இலவச ஊட்டச்சத்தை மாதம் தோறும் வழங்கிவரும் தன்னார்வலர் உதயசங்கரை வாழ்த்தி பேசினார்.

கடலையூர் மருத்துவ அலுவலர் மிருணாளினி காசநோய் தீர்வுமுறை அமைப்பாளர் குப்புசாமி, மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், அரசு மற்றும் தனியார்துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், மற்றும் சுகாதார பார்வையாளர் மகேஸ் ஆகியோர் கலந்து நிகச்சியில் கலந்து கொண்டனர். தனியார்துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் நன்றி கூறினார்

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »