காற்று மாசுபடுதலை தவிர்க்க நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி.மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

Capture

காவல் உதவி ஆய்வாளர் கே.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்!!
நாசரேத்ஜுலை.06:காற்று மாசுபடுதலை தவிர்க்க நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி.மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை காவல் உதவி ஆய்வாளர் கே.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இம்மாதம் 01 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நீர்நிலம்காற்று மாசுபடுதலைத் தவிர்க்க மக்கள் மனதில் விழிப் புணர்வை ஏற்படுத்த பல்வேறுவிழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் தேசிய மாண வர் படையினரால் நடத்தப்பட்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என் .சி.சி.தரைப்படைப்பிரிவுமாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.அல்பர்ட் பேரணிக்கு தலைமை வகித் தார்.9-வது தமிழ்நாடு சைகை அணியின் பயிற்சியாளர் ஹவில்தார் எஸ்.பீட்டர்ராஜ் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி. அதிகாரி மேஜர் எஸ்.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் கே.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு நாசரேத் சந்தி பஜார் நாசரேத் நகர கூட்டுறவு வங்கிமர்காஷிஸ் ரோடுநாசரேத் பேரூந்து நிலையம் நாசரேத் கிராம சாவடி மோசஸ் தெரு வகுத்தான்குப்பம் வழியாக புனித லூக்கா மருத்துவமனை பஜார் வந்தடைந்து மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியில் காற்று மாசு படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க அட்டைகள் மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கினர்.

பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பா டுகளை நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.பேரணி முடிவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி. அதி காரி மேஜர் எஸ்.ஜெயசீலன் தலைமையில் என்.சி.சி. மாணவர்கள் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »