காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா? : ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

tamilisai

சென்னை : திமுக.,விற்கு சரமாரி கேள்விகளை முன்வைத்து, மிக காட்டமாக டுவீட் செய்துள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை.

சேலம் பா.ஜ., அலுவலகத்தில் பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் பதிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ., அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை இன்று (ஆக.,29) காலை வெளியிட்ட டுவீட்டில், அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா?சமூக அமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே அறிவாலயம் அனுமதிக்குமா?

அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும்,என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு…

சேலம் ஆடிட்டர் ரமேஷ்,வேலூர் வெள்ளையப்பன் போன்ற அப்பாவி பாஜ தலைவர்களையும்,தொண்டர்களையும் வெட்டி சாய்த்தும் கோவையில் குண்டு வைத்து கொலைவெறி தாண்டவமாடிய பாவிகளுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பரிந்து பேசும் திமுகதான் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் அப்பாவி பத்திரிக்கையாளர்களை தங்கள் குடும்பத்திற்குள் நடைபெற்ற பதவி கவுரவம் பற்றிய வம்புச்சண்டைக்காக உயிர் பலி வாங்கியதையும் தமிழகம் நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »