கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் 21ம் தேதி மாணவர் சேர்க்கை – கல்லூரி முதல்வர் தகவல்

killikulam

தூத்துக்குடி:

கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு வேளாண்மை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 21ம் தேதி கல்லூரி அரங்கில் நடக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கல்லூரிக்கு வரும் வகையில் கல்லூரியின் பேருந்து (புதன்கிழமை) காலை 8மணி முதல் 8.30மணி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பும், அதனைத்தொடர்ந்து 8.45மணி முதல் 9மணி வரை நெல்லை புதிய பேருந்து நிலையம் முன்பும் நிற்கும். கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களும், பெற்றோர்களும்இந்த பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »