ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

201906251645105872_Arumugasamy-Commission-Extension-for-a-further-4-months-The_SECVPF.gif

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
ஜெயலலிதாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உதவியாளர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள், சிகிச்சை அளித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசிடம் கால அவகாசம் கேட்ட நிலையில் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் தற்போது 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »