தமிழிசைக்கு ஆளுநர் பதவி, தமிழகத்திற்கு பெருமை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

kadambur raju

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள சண்முகா நகரில் இருக்கும் ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோவில் 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கிங் இளைஞர் அணியினர், நாடார் உறவின்முறை சங்க பொது நல மருத்துவமனை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவமுகம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவமுகாமை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் ”இந்தியாவிலே ஒரு கட்சிக்கு மாநிலத்தில் பெண் தலைவராக 2014ல் இருந்து பாஜக கட்சியை நிர்வகித்து சிறப்பாக பணியாற்றியதால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக பாஜக ஆளுநர் பதவி வழங்கியுள்ளது.

ஆளுநர் பதவிக்கு தமிழிசை சவுந்தரராஜன் தகுதியானவர் படித்தவர் மருத்துவ பட்டம் பெற்றவர் என்றும், இதைத்தான் நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களிடம் முன்வைத்தோம் அவர் வெற்றி பெற்று இருந்தால் நிச்சயமாக மத்திய அமைச்சராக வருவார் தூத்துக்குடி மாவட்டம் வளம் பெறும் என்று மக்களிடம் தெரிவித்தோம் அந்த வாய்ப்பை நமது மாவட்ட மக்கள் பயன்படுத்த தவறி விட்டார்கள்,

தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக வந்திருப்பார் என்றும்.தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரதிநிதி அடுத்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமை என்றும், பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பாக செயல்படுவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அழைத்து பாராட்டியுள்ளார்,

அந்த வகையில் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும், பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துறை சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் போக்குவரத்துறை மற்றும் அந்த துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும், வங்கிகள் இணைப்பு என்பது மத்திய நிதி அமைச்சகம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளது அது நடைமுறையில் வரும்போதுதான் அதுபற்றி கருத்து சரியாக தெரியும் இருந்தாலும் பொதுமக்களைப் பொறுத்தவரை பாதிப்பாக தெரியவில்லை வங்கி ஊழியர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்றார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »