திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணி 7ம் நாள் திருவிழா

thiruchendur murugan

தூத்துக்குடி, ஆக. 27

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா 7ம் திருவிழா நேற்றுமாலை சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர்.

இத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானைக்க உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.

நேற்றுமாலையில் சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது.

பின்னர் நேற்றுமாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. சப்பரத்தின் பின்புறம் சுவாமி சண்முகர் நடராஜர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டுசாத்தி மற்றும் ரோஜா மாலை சாத்தி வழிப்பட்டனர். நள்ளிரவு சுவாமி சண்முகர் சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர் வெங்குபாஷா மண்டபத்தை சேர்ந்தார்.

ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று(27ம் தேதி) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகிறார்.

இத்திருவிழா உச்சகட்ட நிகழ்ச்சியாக வரும் 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »