துப்பாக்கி சுடும் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தில்ஷன் பதக்கம் வென்றார்!!

nazareth

நாசரேத்,ஆக.05:துப்பாக்கி சுடும் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி.மாணவர் எம்.தில்ஷன் தங்கப்பதக்கம் வென்றார்.அவரைப்பாராட்டி தலைமை யாசிரியர் ஆர்.அல்பர்ட் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த ஆக. 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை மதுரை, இடையபட்டியில் உள்ள தேசிய மாணவர் படை பயிற்சி மையத்தில் 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி, திருநெல்வேலி சார்பில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் என்.சி.சி. சீனியர் டிவிஷன் மற்றும் ஜுனியர் டிவிஷன் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த “தல் சைனிக்”; முகாமில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அணியினருக்கான பயிற்சி முகாமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையோர் பிரிவு (ஜுனியர் டிவிஷன்) மாணவர்களில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.தில்ஷன் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மாணவனை முகாம் அதிகாரி லெப்டினட் கர்னல். பிரவீன்குமார் அகுஜா பாராட்டினார்.

பள்ளியில் கூட்டுப்பிரார்த்தனையின் போது தலைமை ஆசிரியர் ஆர். அல்பர்ட் மாணவனுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவனையும் பயிற்றுவித்த என்.சி.சி. அலுவலர் மேஜர் எஸ். ஜெயசீலனையும் கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல். பிரவீன்குமார் அகுஜா, தாளாளர் சந்திரன் தலைமை ஆசிரியர் ஆர்.அல்பர்ட் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »