தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் காவல் நிலையம் அருகில் வெட்டிக் கொலை !

murder

தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சிவகுமார் (40). இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் நிலப்பிரச்சனை தகராறில் அத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முதல் எதிரியாக சிவகுமார் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடக்கிறது.

இதில் ஆஜராக சிவகுமார் இன்று(21.08.2019) காலை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள சாலையில் நடந்து வந்த அவரை பைக்கில் வந்த கும்பல் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியும் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து எஸ்பி அருண் பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகுமார் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் கொலை வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிவகுமாரின் மூத்த சகோதரர் ராம்குமார் திருநெல்வேலியில் வழக்கறிஞராக உள்ளார். மற்றொரு சகோதரர் முத்துக்குமார் என்பவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார். சிவகுமார் நெல்லை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் பட்டப்பகலில் நீதிமன்றம், காவல் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழிக்கு பழியாக தொடரும் கொலை

கடந்த 2005ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் நிலப்பிரச்சனை தகராறில் அத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முதல் எதிரியாக சிவகுமார், 2வது குற்றவாளியாக கண்ணன், 3வது குற்றவாளியாக முருகன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை இன்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவிலில் பழிக்குப் பழியாக கண்ணனை ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்தனர். இவ்வழக்கில் கைதான ராஜேஷ் ஜாமீனில் வந்துள்ளார்.

இந்நிலையில் அத்திப்பழம் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த சிவகுமாரை ராஜேஷ், முருகேசன், ரமேஷ், உட்பட 7பேர் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்த இடத்த்தில் கத்தி, அரிவாள், பேக் போன்றவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »