’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’

arrest

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன் சரவணன் என்ற ஜிந்தா சரவணன் என்பவர் கடந்த 27.08.2019 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம், முத்துநகரைச் சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல் (39), தாளமுத்து நகர் குமரன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (39), மற்றும் பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த பிரவுன் மகன் ஜான்சன் (43) ஆகிய 3 பேரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கைது செய்து சிறையிலடைத்தார்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட மூன்றுபேர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பிக்கு அறிக்கை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பியான அருண் பாலகோபாலன், பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூர், 3பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் 3பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »