தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

tamilisai

டெல்லி: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார்.

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநர் நரசிம்மன் இருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவரே ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவுக்கு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரே மீண்டும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. தற்போது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »