நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க ரூ.50 ஆயிரம் நிதி உதவி!

news

நாசரேத்,ஜுலை.19:நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட் டர் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவியை திருத்தமிழ் அறக்கட்டளை நிறுவ னத் தலைவர் நரைன் மா.திபாகரன் வழங்கினார்.

நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப் பட்டது.

பள்ளித்தாளாளர் அந்தோணிஇருதயதோமாஸ் தலைமை வகித்தார். தலைமை யாசிரியை அருட்சகோதரி ஆரோக்கிய செல்வி வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக திருத்தமிழ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நரைன் மா.திபாகரன் கலந்து கொண்டு பெருந்தலைவர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ,மாணவிகள் கம்ப்யூட்டர் பயில்வதற்கு கம்ப்யூட்டர் வாங்கரூ.50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.

விழாவில் மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்டத் தலைவர் நித்தியானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி ஆசிரியை விக்டோரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்விக் குழுத் தலைவர் அந்தோணிராஜா, ஆசிரியர் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »