நாசரேத்- பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை பழைய கோவில் 139-வது வருட விழா!

nazareth

நாசரேத்,ஆக.16:பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை பழைய கோவில் 139-வது வருட விழாவும், பங்கைச் சார்ந்த வெளியூர் வியாபாரிகள் நடத்திய 12-வது அசன விழாவும் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான சுற்று வட்டார மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை பழைய கோவில் 139-வது வருட விழாவினை முன்னிட்டும், பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தைச் சார்ந்த வெளியூர் வியாபாரிகள் நடத்திய 12-வது அசன விழா வினை முன்னிட்டும் சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் அடிகளார் தலைமையில் மண்ணின் மைந்தர் அருட்தந்தை மார்ட்டின் அடிகளார் திருப்பலியை நடத்தினார்.

இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அசன விருந்து பரிமாறப் பட்டது. அசன விருந்தினை தந்தையர்கள் துவக்கி வைத்தனர்.இதில் பிரகாசபுரம் சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வெளியூர் வியாபாரிகள் ஆபிரகாம்,ஜோசப் அந்தோணி,ஜோசப் காந்தி மற்றும் அசனக் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »