பதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

tamilisai

தூத்துக்குடி

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியேற்புக்கு பின்னர் முதல் முறையாக நேற்று தமிழகம் வந்தார். தமிழகம் வந்த அவருக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையில் போலீஸ் மரியாதை வழங்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பாஜகவினரும், கட்சித் தொண்டர்களும் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் மாலை 4 மணி அளவில் தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். தூத்துக்குடி அழகர் மஹாலில் நடைபெறும் பாரதி விழாவில் கலந்து கொண்டு இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரை ஆற்றுகிறார்.

இதை தொடர்ந்து அவர் கார் மூலம் மதுரை சென்றடைந்து அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »