பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா! அன்னையின் தேர் பவனி நடந்தது!!

nazareth

நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள்கள் நடைபெற்றது.

திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறை யுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் திருநாளன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை,திருவிழா மாலை ஆராதனை நடைபெற் றது.தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இதில் தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டுரவி மறையுரை ஆற்ற்றினார்.இரவு 11 மணிக்கு அன்னை யின் தேர்பவனி நடைபெற்றது.

1௦0-ஆம் திருவிழாவன்று அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி பங்குத்தந்தை மார்ட்டின் தலைமையில்நடந்தது.காலை 8மணிக்கு திருவிழா திருப்பலி வடக்கன்குளம் அமலிவனம் பங்குத்தந்தை ஜெபநாதன் தலைமையில் நடந்தது. பாளையங்கோட்டை புனித சேவியர் கலைக் கல்லூரி அதிபர் பங்குத்தந்தை ஹென்றி மறை யுரை ஆற்றினார். காலை 11 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ரவிபாலன் தலைமை யில் நடந்தது.

அழகப்பபுரம் பங்குத்தந்தை நெல்சன்பால்ராஜ் மறை யுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு இன்னிசை பட்டி மன்றம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங் குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் அருட்ச கோதரிகள், விழாக் குழுவினர், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »