வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம்: விவாகரத்துக்கு முகாந்திரம் ஆக்கக்கோரிய மனுவை ஐகோர்ட்டும் நிராகரித்தது

201907091636313261_Court-Declines-Plea-Asking-For-Marital-Rape-To-Be-Made_SECVPF.gif

சுப்ரீம் கோர்ட்டில் அனுஜா கபூர் என்ற பெண் வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை குற்றமாக கருதி வழக்குப் பதிவு செய்யவும், அதை விவாகரத்துக்கு ஒரு காரணமாக ஆக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். திருமண பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் வழிமுறைகளை மத்திய அரசு வகுக்க உத்தரவிட  வேண்டும் எனவும் அவருடைய தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் ‘‘இந்த மனுவில் முகாந்திரம் இல்லை. இதை விசாரிக்க விரும்பவில்லை’’ என்று நீதிபதிகள் கூறினர். டெல்லி ஐகோர்ட்டை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அனுஜா கபூர் ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இம்மனு நீதிபதிகள் டிஎன் படேல் மற்றும் ஹரிசங்கர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. 
நீதியரசர் டி என் படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை நிராகரித்தது. சட்டமன்றத்தை உருவாக்குவது நீதிமன்றம் கிடையாது, ஏனெனில் அது பாராளுமன்றத்தின் களமாகும் எனக் கூறினர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »