’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்

sa.sandrasekar

தூத்துக்குடி

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அவரை செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். சமீபத்தில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு ’’அதிமுகவினர் இவ்வாறு பேசியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

எல்லோரும் பேசும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீ-ன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி கேட்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் இவ்வாறு பேசி இதற்கு காரணம் என்ன என தெரியவில்லை’’ என்றார்.

நடிகர் விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா என கேட்டதற்கு ’’அப்படி எனக்கு தெரியவில்லை’’. என்று சொல்ல்விட்டு அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து கிளம்பினார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »