’’ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய டிரைனிங்’’

srivai news

ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ‘’ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’’ குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஊமைத்துரை தலைமை வகித்தார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா வரவேற்றார்.

முகாமில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் (உழவியல்) பேராசிரியர் செந்தில்குமார் விவசாய நிலங்களில் மண்ணின் தரத்தை உயர்த்துவது, மண்புழு உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள், மண்ணின் அமிலத்தன்மையை சமநிலையாக வைப்பது எப்படி? என்பது குறித்தும், விவசாய சாகுபடிக்கான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிப்பதற்கான நுண்ணீர் பாசன முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

வாகைக்குளம் ஸ்காட் ஆராய்ச்சி மைய உழவியல் நிபுணர் முருகன், விவசாய சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வகையில் விதை நேர்த்தி, வரிசை நடவுமுறை, திருந்திய நெல் சாகுபடி, களை எடுத்தல், பூச்சி நிர்வாக முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா தலைமையில், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »