’’ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா’’

srivai

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி மற்றும் தேசிய ஊட்டச்சத்து குழுமம் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத்திருவிழா, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமை வகித்தார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப்பணி திட்ட அலுவலர் தங்கலெட்சுமி முன்னிலை வகித்தார். பொருளியியல் துறை பேராசிரியர் முருகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ‘’சத்தான உணவுகளை உண்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவியர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் இணைந்து நடத்திய பாரம்பரியமிக்க சத்தான உணவுகளான காய்கறிகள், கீரைகள், பழங்கள், நவதானியங்கள் மற்றும் இயற்கை உணவுகள் இடம்பெற்ற மாபெரும் உணவுத்திருவிழா நடைபெற்றது.உணவுத்திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளை கண்டு மகிழ்ந்த அனைவரும் சத்தான உணவுகளையும் உண்டும் மகிழ்ந்தனர்.

முன்னதாக கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களுடன் இணைந்து ஊட்டசத்து பணியாளர்கள் கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டதுடன், ஊட்டசத்தின் அவசியம் மற்றும் நவதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஊட்டச்சத்து பணியாளர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில், ஊட்டச்சத்து திட்ட பணியாளர்கள், கல்லூரி பேராசிரியை-பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »