ஜாமின் ரத்து; சல்மானுக்கு ‛குத்து’

0
23
Tamil_News_large_2312537

அடுத்த முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால் முன்னர் வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மான் வேட்டையாடியதாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 1998 ல், ஜோத்பூர் அருகே கங்காணி என்னுமிடத்தில் அரிய வகை மானை வேட்டையாடினார் என்பது வழக்காகும்.

இதில், கடந்த 2018ல் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து சல்மான்கான் ஜோத்பூர் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மானுக்கு ஜாமின் வழங்கியிருந்தது. பிப்ரவரி மாதம் விசாரணை தொடங்கி ஏப்ரல் 3 மற்றும் ஜூலை 4 என்று இருமுறை உத்தரவிட்டது.

ஆனால், மூன்றாவது முறையாக இன்றும் (ஜூலை 4) சல்மான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், அடுத்த முறை விசாரணைக்கு சல்மான்கான் ஆஜராகாவிட்டால் அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் கோர்ட் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here