தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம்’ குறும்படத்தை கனிமொழி எம்.பி வெளியிட்டார்

0
42
kanimozhi news

தூத்துக்குடி, நவ.3:

தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம்’ குறும்படத்தை கனிமொழி எம்.பி வெளியிட்டார். தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன், திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப்பணியாளராக பணியாற்றிய பாக்கியலெட்சுமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை தரம்பிரிக்கும்போது அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இதனை மையாமாக வைத்து தூய்மைப்பணியாளர்களின் நிலையை எடுத்துக் கூறும் வகையில் ஆதித் தமிழர் மீடியா சார்பில் ‘குப்பையின் மறுபக்கம்’ என்கிற குறும்படம் தயாரிக்கப்பட்டது. இதன் வெளியீட்டுவிழா தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு, உதவி இயக்குநரும் ஆதித்தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளருமான அருந்ததிஅரசு தலைமை வகித்தார். பாப்பாசங்கர், சீலன், மகாராஜன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் செங்குட்டுவன் வரவேற்றார். குறும்பட இயக்குநர் பிராட்வே சுந்தர் தொடக்கவுரையாற்றினார்.

விழாவில், கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு குறும்படத்தை வெளியிட்டு, நெல்லை மாநகராட்சியில் குப்பை பிரிக்கும் பணியின்போது பாதிக்கப்பட்ட பணியாளர் பாக்கியலட்சுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார்.

இதில், தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், ஜெயக்கொடி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், முத்தையாபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர துணைசெயலாளர் கீதாமுருகேசன்,

தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் பாலு, திராவிடர் விடுதலை கழக மாநில செயலாளர் பால்பிரபாகரன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாநகர செயலாளர் ஞானசேகரன், மா.கம்யூ.மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ரெஜினா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here