திருச்செந்தூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா – சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்

0
28
murugan kovil

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் சொக்கப்பபனை கொளுத்தப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டடுது. அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை மகா மண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதனையடுத்து கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து கடற்கரையில் சொக்கப்பனையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு திரண்டிருந்த பக்தர்கள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதருக்கு சண்முகவிலாச மண்டபத்தில் மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் செயல் அலுவலர் அம்ரித் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here