தூத்துக்குடி : பாலத்திலிருந்து கவிழ்ந்தது காய்கறி வாகனம்

0
67
accident

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்த காய்கறி வாகனம் தடுப்பு சுவரை தாண்டி கீழே விழுந்தது. அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பாக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை என்கிறார்கள்.

ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி மார்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் வந்த வாகனம் இது. இந்த வாகனத்தை ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். பாலத்தின் நடுபகுதியில் உள்ள திருப்பத்தில் திரும்பும் போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் ரமேஷ், கிளீனர் லெட்சுமனன் ஆகியோர் காயமடைந்தனர். காய்கறிகள் சேதமாகின. இது குறித்து தகவல் அறிந்து சம்மவ இடத்துக்கு சென்ற போலீஸார் மீட்டனர்.

குறிப்பிட்ட அந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அகலம் குறைவான அந்த பாலத்தில் வேகம் குறையாமல் போவோர் மாட்டிக் கொள்கிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் அப்பாலத்தில் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் செல்வது நல்லதே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here