சட்டவிரோத முறையில் கட்டப்பட்ட ஓட்டல் ஒரு சில வினாடிகளில் இடித்து தரைமட்டம்

0
14
201907050802193631_Shanti-Palace-Hotel-in-Ujjain-was-demolished-by-Municipal_SECVPF.gif

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் சாந்தி பேலஸ் என்ற பெயரில் ஓட்டல் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  ரூ.20 கோடி செலவில் 100 அறைகள் கொண்ட பல அடுக்குகள் கொண்ட வகையில் ஓட்டல் அமைந்திருந்தது.
ஆனால் குடியிருப்பு காலனிக்காக ஒதுக்கீடு செய்த நிலம், சட்டவிரோத முறையில் வாங்கப்பட்டு அதில் ஓட்டல் கட்டப்பட்டு உள்ளது என புகார் எழுந்தது.  இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு எழுந்தது.  இதுபற்றிய வழக்கு 10 வருடங்களுக்கு மேலாக நீடித்தது.  இதனிடையே ஓட்டல் அருகில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஓட்டலை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது.  இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
இதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஓட்டலை இடித்து தகர்த்தனர்.  அந்த ஓட்டல் கட்டிடத்திற்குள்ளேயே விழும் வகையில் ஒரு சில வினாடிகளில் இடித்து தள்ளப்பட்டது.  இதுபற்றிய காட்சிகள் பதிவாகி வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here