நாசரேத், நவ.09: நாசரேத்-வெள்ள ரிக்காயூரணி சகல பரிசுத்தவான் களின் ஆலய 71-வது பிரதிஷ் டைப் பண்டிகை அசன விழா 3 நாள்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபைமன்றம், நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி சேகரத் திற்குட்பட்ட வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 71-வது பிரதிஷ்டைப் பண்டிகை அசன விழா 3 நாள்கள் நடைபெற் றது.முதல்நாள் மாலைஆராதனை முடிவடைந்ததும் ஊரைச் சுற்றி ஆயத்த ஜெப பவனி சேகர தலை வர் அறிவர் ஜெபராஜ் தலைமை யில் சபை ஊழியர் ஜாண் வில் சன் முன்னிலையில் நடந்தது. பின்னர் கன்வென்ஷன் கூட்டம் நடந்த்து.

இதில் வழக்கறிஞர் ரமேஷ் தம்பதியினர் சிறப்பு பாடல்கள் பாடினர். நாசரேத் கர்த்தரின் தோட்டம் ஊழிய நிறுவனர் ராபர்ட் ஜெயசிங் சிறப்பு செய்தி கொடுத் தார்.2-வதுநாள்பண்டிகை ஆயத்த ஆராதனை சேகர தலைவர் அறி வர் ஜெபராஜ்தலைமையில் நடை பெற்றது.இதில் மதுரை-இராமநா தபுரம் திருமண்டலம், ஆத்திக்கு ளம் சேகரத்தலைவர் பீட்டர் ஜோசப் சிறப்பு செய்தி வழங்கி னார். முடிவில் ஊழியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறைவு நாளன்று பண் டிகை ஆராதனையும், பரிசுத்த நற் கருணை ஆராதனையும் சேகர தலைவர் அறிவர்ஜெபராஜ் தலை மையில் நடைபெற்றது.
மதியம் ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேகர தலைவர் அறிவர்ஜெபராஜ் தலை மையில் சபைஊழியர் ஜாண்வில் சன் முன்னிலையில் பரிபாலனக் கமிட்டி தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.