நாசரேத், நவ.09: நாசரேத்தில் பல வருடங்களாக மூடி கிடக்கும் ஆழ் வார்திருநகரி யூனியனுக்குட்பட்ட சுகாதார நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆவண செய்ய வேண்டும் என நாசரேத் நகர வியாபாரிகள் சங் கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 44- வது ஆண்டி விழா தலை வர் எட்வர்ட் கண்ணப்பா தலை மையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஞானையா வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் இராவி.அசுபதி சந்திரன் ஆண்ட றிக்கை சமர்ப்பித்தார். பொருளா ளர் வரவு- செலவு வாசித்தார். இணை செயலாளர்கள் ஜெயக்கு மார், பிரிதிவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கொரோனா தொற்று காலத்தில் தனது கிளினிக்கை பயன்படுத்தி சிறப்பாக பணியாற்றி ஏழை, எளிய மக்களின் இன்னல் நீக்கிய ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் கார்மேகராஜ் பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக காவல் துறை உதவி ஆய்வாளர் கள் தங்கேஸ்வரன், அனந்தமுத்து ராமன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பரிசுகள்வழங்கினர்.விழாவில் நாசரேத்தில் பல வருடங்களாக மூடி கிடக்கும் ஆழ்வார்திருநகரி யூனியனுக்குட்பட்ட சுகாதார நிலையத்தை திறக்க ஆவண செய்ய வேண்டும், திருச்செந்தூர்- திருநெல்வேலி ரயில் பாதையை மின் மயமாக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்களை வியாபாரிகள் சங்கம் நிறைவேற் றியது. முடிவில் சங்க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.புரு ஷோத்தமன் நன்றி கூறினார்.