நாசரேத்தில் முதலாளியின் குடும்பத்தினரை காப்பாற்ற, நல்ல பாம்பை கடித்து குதறி கொன்று உயிரை விட்ட நாய்!

0
503
Capture

நாசரேத்,ஜூலை:05.தனது முதலாளியின் குடும்பத்தினரை காப்பாற் றுவதற்காக, பாம்பை கடித்து குதறி கொன்று விட்டு, நாய் உயிரை விட்ட சம்பவம் நாசரேத்தில் நடந்துள்ளது.

  தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிலி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரு கிறார்.இவருடைய மனைவி பொன்செல்வி. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகின்றனர்.

                   பொன்செல்வி தனது வீட்டில் ‘டேசன்’ இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். அவற்றில் ஆண் நாய்க்கு ‘அப்பு’  என்றும், பெண் நாய்க்கு ‘நிம்மி’என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர்.பொன்செல்வியின் குடும்பத்தினர் இரண்டு  நாய்களையும் பாசத்துடன் குழந்தைபோல வளர்த்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 02 ஆம் தேதி இரவில் பொன்செல்வி தன்னுடைய மகன்களுடன் வீட்டில் தூங்கினார். வீட்டின்வளாகத்தில் இரண்டுநாய்களும் படுத்து கிடந்தன. அப்போது அங்கு சுமார் 6  அடி நீள நல்ல பாம்பு வந்ததை பார்த்த இரண்டு  நாய்களும் குரைத்தன. அப்போது ஆண் நாய், அந்த பாம்பின் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த பாம்பு, ஆண் நாயை கொத்தியதில் நாயின் உடலில் வி‌ஷம் பரவியது. இருந்தாலும் நாய், பாம்பை தொடர்ந்து கடித்து குதறி பாம்பை வீட்டின் படிக்கட்டுவழியாக மாடிக்கு இழுத்து சென்றுள்ளது. அங்கு சிறிதுநேரத்தில் அந்த பாம்பும், நாயும் இறந்தன. காலையில் தூங்கி எழும்பிய  பொன்செல்வி வீட்டின் கதவை திறந்தபோது, வாசலில் பெண் நாய் மட்டும் நின்றது.பொன்செல்வி ஆண்நாயை தேடிச் சென்றார்.அப்போது வீட்டின் மாடியில் நல்ல பாம்பும், ஆண் நாயும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.தனது முதலா ளியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக பாம்பை கடித்து கொன்று உயிரை விட்ட நாயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here