தூத்துக்குடி மாநகரில் தீபாவளி அன்று 3 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள்

0
81
thoothukudi news

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் தீபாவளி அன்று 3 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்புத்துறை தூத்துக்குடி நிலையம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மாநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் துவங்கிய தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் மாநகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து ‘பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது’ தொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் கூறியதாவது, தீபாவளி பண்டிகை-யை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநரும், காவல்துறை தலைவருமான ஜாபர்சேட் உத்தரவின்படி, தென்மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் வழிகாட்டுதலின்படி தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறையினர் தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தீபாவளி அன்று தீயணைப்புத்துறை சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் முக்கியமான மூன்று இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகை அன்று மாவட்டம் முழுவதும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் 196தீயணைப்பு வீரர்கள் சிறப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். எனவே பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நேரத்தில் சரியான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிடவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here