தூத்துக்குடி ‘சலூன் கடையில் நூலகம்’ பிரபலத்தை பொதுநூலக இயக்குநர் குப்புசாமி சந்தித்தார் !

0
286
books

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்மாரியப்பன். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அத்துடன் அவரது கடையில் பயனுள்ள பல நூல்களை வைத்திருக்கிறார். அவரது கடை மினி நூலகமாகவே செயல்பட்டு வருகிறது. அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன் பெற்று வருகிறார்கள். இந்த தகவல் மீடியாக்கல் மூலம் வெளியே தெரிய வர இப்போது பொன்மாரியப்பன் ஏக பிஷியாகிவிட்டார்.

வாழ்த்து மழையில் நனைந்து வரும் பொன்மாரியப்பன், புதிய சலுகை ஒன்றை அறிமுகபடுத்தியிருக்கிறார். அதாவது தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாசித்தால் அதற்கு கட்டண சலுகை செய்து வருகிறார். இப்போது ’சுஷில்குமார் பியூட்டிகேர்’ என்கிற அவரது சலூன் கடை ஊரை தாண்டி பரவலாக வெளியில் தெரிந்திருக்கிறது.

அதற்கு சாட்சியாக சென்னை பொது நூலக இயக்குநர் பெ.குப்புசாமி, பொன்மாரியப்பன் கடைக்கு நேரில் வந்தார். பொன்மாரியப்பனை பாராட்டிய இயக்குனர், மேலும் சில நூல்களை அவரும் பொன்மாரியப்பனிடம் கொடுத்தார். இப்போது பொன்மாரியப்பனின் சலூன் கடை மினி நூலகமாகவே காட்சியளிக்கிறது.

இதற்கிடையே பொன்மாரியப்பன், சில நூல்களை தூத்துக்குடியிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு கொடுத்து மகிழ்ந்தார். பத்திரிக்கையாளர்கள் பொன்குமாரின் சேவையை பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here