பெரியதாழையில் கைப்பந்து போட்டி

0
12
sathankulam

சாத்தான்குளம், நவ.12:

பெரியதாழையில் நடந்த கைப்பந்து போட்டியில் கொம்புத்துறை அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை டாக்டர் கிளாசியான நினைவாக கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கொம்புத்துறை, பெரியதாழை, கூடுதாழை உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. போட்டியை பெரியதாழை பங்கு தந்தை சுசீலன் தொடங்கி வைத்தார். போட்டியில் கொம்புத்துறை அணிக்கு முதல் பரிசும், பெரியதாழை அணிக்கு 2ஆம் பரிசும், கூடுதாழை அணிக்கு 3ஆம் பரிசும், பெரியதாழை ஏ அணிக்கு 4ஆம் பரிசும் கிடைத்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி பரிசுகள் வழங்கி பேசினார்.

இதில் ஊர் நலக்கமிட்டியினர், முன்னாள் விளையாட்டு வீரர்கள், கைபந்து ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜ் மற்றும் செயிண்ட ஜான்ஸ் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here