தொடர் முகூர்த்தம், தொடர் பண்டிகை – சாத்தான்குளத்தில் பூக்கள் விலை உயர்வு

0
30
news

சாத்தான்குளம், நவ.12-

தொடர் முகூர்த்தம் மற்றும் பண்டிகையையொட்டி சாத்தான்குளத்தில் பூக்கள் விலை உயர்வு பிச்சி ,மல்லிகை, கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன..

சாத்தான்குளம் பகுதிகளில் இரு தினங்களாக திருமண நிகழ்ச்சிகள் மற்றும் புதுமனை புகுவிழா உள்ளிட்ட ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடந்தன . வெள்ளிக்கிழமையும் திருமணங்கள் சுப முகூர்த்தமாக உள்ளதால் திருமண நிகழ்ச்சிகளும் அதிகம் உள்ளன. .சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது .இதனையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு அடைந்துள்ளது .சாத்தான்குளத்தில் மொத்த வியாபாரம் செய்யும் பூக்கடையில் ஒரு கிலோ மல்லிகை அரும்பு மற்றும் பிச்சி அரும்பு கிலோ 2ஆயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது.

இதுகுறித்து சாத்தான்குளத்தில் பூ மொத்த வியாபாரம் செய்யும் சுப்பையா கூறுகையில், .தற்பொழுது பூக்கள் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது தேவைக்கு ஏற்ப பூக்கள் விளைச்சல் இல்லாததால் பூ விலை உயர்ந்துள்ளது .எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தீபாவளி நேரத்தில் ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாய் என இந்த ஆண்டு விற்கப்படுகிறது. என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here