விடாது பெய்த மழை! வீட்டுக்குள் புகுந்த மழைநீர் – தூத்துக்குடி மாநகராட்சி

0
144
thoothukudi rain news

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் விடாது பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில், நேற்று (12.11.2020) இரவு பெய்ய ஆரம்பித்த மழையானது விட்டு, விட்டு பெய்து விடாமல் தொடர்ந்து பெய்து வருவதைத் தொடர்ந்து , மாநகரில் மழைநீர் தேங்காத சாலைகளே இல்லை என்ற அளவிற்கு, பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் சில பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீரானது பிரையண்ட்நகர் மேற்கு பகுதியில் வீட்டுக்குள்ளும் புகுந்துள்ளதால்,பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் நடைபெறும் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அண்ணாநகர் முதல் தெருமுதல் விவிடி சிஞல் வரை முடிக்கப்படாத ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலான சிமெண்ட் ரோடு மழைநீரால் சூழ்ந்திருக்கிறது.

இந்நிலையில், மழை மேலும் ஒரிரு தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், மழையின் பாதிப்புஇன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைக்கால பாதுகாப்பு நடைவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here