நாசரேத்,நவ.13:வரும் சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுகவை கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குரும்பூரில் நடந்த அதிமுக துவக்க விழா மாவட்ட அளவி லான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., பேசினார்.
அதிமுக 49-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆழ்வார்தி ருநகரி கிழக்கு ஒன்றியம் சார் பில் மாவட்ட அளவிலான கிரிக் கெட் போட்டி குரும்பூரில் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 170 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.இறுதிப்போட்டியில் மைக்கநாடார்குடியிருப்பு எம். என்.கே. அணி முதலிடத்தையும், இடையன்விளை கிரீன் ஸ்டார் என்.டி.ஆர். அணி 2-ஆம் இடத்தை யும், சோழியக்குறிச்சி லெவன் ஸ்டார்ஸ் அணி 3-ஆம் இடத்தை யும், அங்கமங்கலம் யங் பிளட் அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை., கிழக்கு ஒன்றிய தலைவர் பரமசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கானம் நகர செயலாளர் செந்தமிழ் சேகர், தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஞானையா, காயல்பட்டிணம் நகர செயலாளர் மௌலானா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சண்முகநாதன் எம்எல்ஏ பரிசு வழங்கி பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக ஸ்டாலினும், கனிமொழியும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று கூறி வருகின்றனர். யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்களுக்கு தெரியும்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 வருடமாக எம்எல்ஏவாக இருப்பவர் இதுவரை தொகுதிக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்றாலும், திருச்செந்தூர் தொகுதியில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெற வேண்டும். இவை அனைத்தும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. எனவே இளைஞர்கள் சரியான முடிவை எடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன், தென்திருப்பேரை இளைஞரணி செயலாளர் கந்தன், மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் பிரபாகரன், தென்திருப்பேரை நகர செயலாளர் ஆறுமுகநயினார், நாசரேத் முன்னாள் டவுன் பஞ்., தலைவர் மாமல்லன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.