தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று(13.11.2020) தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். பின்னர் காவலர்களுடன் பட்டாசுகள் வெடித்து, காவலர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி மற்றும் திரு. செல்வன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர். கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.