ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற அசாதாரண புத்தியை களைந்து, அனைவரையும் ஒன்றிணைப்பதே தீபாவளி பண்டிகையாகும். அகங்காரம், ஆணவம் என அத்தனை எதிர்மறைகளையும் புறம் தள்ளிவிட்டு உறவுகளை பலப்படுத்த பயன்படுவதே இந்த தீபாவளி. அக்கம்பக்கத்தார் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்குவதன் மூலம் நட்பு வலுப்படுத்தபடுகிறது. அந்த வேலையை செய்வதற்காகவே இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கோடைகாலம் முடிந்து மழை காலம் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், ஒவ்வொருவருடைய உடலிலும் அசுத்தங்கள் அகற்றப்பட்டு, புதிதாக சக்தியூட்ட வேண்டியது அவசியமாகும். அந்த வேலையை செய்து வருகிறது இந்த தீபாவளி.

அதிகாலையில் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பதும்.எண்ணை பலகாரங்களை தயார் செய்து சாப்பிடுவதும் உடலில் உள்ள அசுத்தங்கள் அகற்றப்பட்டு,சக்தியூட்டும் போது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
இந்த சூழ்நிலையில் வரக் கூடிய மழைகாலம் மற்றும் குளிர்காலத்தை உடல் தாங்குகிறது. மேலும் உடலில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கமுடிகிறது. இதுபோன்ற நோக்கங்கள் காரணமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் இந்தியர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.