அனைவரும் ஆரோக்கியம் பெற வேண்டும் : பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து !

0
109
modi

புதுடில்லி: தீபாவளி நன்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் என பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

கொரோனா பரவல் இருந்தாலும் அதனையும் வென்று தங்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டு மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் ,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ! அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி ஒளி ஒளிரட்டும், ஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம். மாசு இல்லாத தூய்மையான தீபாவளியை கொண்டாடுவோம். என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்தில் .,அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த திருவிழா மக்களுக்கு மேலும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும். எல்லோரும் செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here