தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தை தரமாக தயார் செய்திருக்கலாம்

0
148
bus stand news

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து பெற்றதையொட்டி தரத்தை உயர்த்தும் வேலையில் அரசும் அரசு அதிகாரிகளும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநகர பகுதியில் பல்வேறு மாற்றங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், வாழ்வாதாரத்தை காரணம் காட்டி புதுமைபடுத்துவதற்கு எதிர்ப்பு என இருக்க கூடிய ரிஸ்க்குகளை கடந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

கரைக்க முடியாத அதிகாரியாக ஆணையர் ஜெயசீலன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரின் பிடிவாதத்தால் சில நல்ல காரியங்கள் நடந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் சில அரசியல் குறுக்கீடுகள் அவரை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளுவதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ கோடிக்கணக்கான நிதியை மத்தியரசு ஒதுக்கி தூத்துக்குடி மாநகராட்சியை தரமானதாக்க சொல்லியிருக்கிறது. அதனை திறம்பட செய்து முடிப்பார் என மக்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் பல்வேறு பணிகளை பாராட்டினாலும் சாதாரண பேருந்து நிலைய விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டாரே என மக்கள் புலம்புகிறார்கள். ஸ்மார்ட் சிட்டிக்கான புதிய பேருந்துநிலைய பணிகள் முடிவதற்கு இன்னும் அதிக நாட்கள் பிடிக்கும் என்பது நன்றாக தெரிகிறது.

அப்படி இருக்கும்போது, மழைகாலம் தொடங்கும் முன்பாக தற்காலிக பேருந்து நிலையத்தை சற்று தரமானதாக உருவாக்கியிருக்கலாம். கொரோணாவுக்காக வெகுகாலம் சும்மா கிடந்த பேருந்து நிலையத்தை சரியான திட்டத்துடன் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். அதை மாநகராட்சி நிர்வாக செய்ய தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அத்தனை அரசியலையும் தாண்டி ஆனையர் நல்லது செய்வார் என மாநகர மக்கள் இன்னமும் நம்புகிறார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் முழு ஊக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here