மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் : தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்

0
77
collector news

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையொட்டி தமிழ்கம் மட்டுமில்லாமல் தென் மாநிலங்களில் மழை நீரால் சேதங்கள் ஏற்பட்டது. ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் முழுமூச்சாக இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகலை செய்து வருகிறது.

தூத்துக்குடியில் நேற்று இரவில் தொடங்கிய மழை, இன்று மாலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல தெருக்களில் மழைநீர் தேங்கி, மக்களை சிரமபடுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இன்று கள ஆய்வில் இறங்கினார். மழை நிரால்பாதிக்கப்பட்ட பக்கிள்புரம், திரேஸ்புரம், அம்பேத்கார்நகர்,செல்வவிநாயகபுரம், பிஅண்டு டி காலனி போன்ற பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அவர், நடவடிக்கைகளை விரைவு படுத்தினார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை முதலிலேயே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. 36 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ஸ்பெசல் டீம் தண்னீரை வெளியேற்றும் வேலையில் இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 40 மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் 100 மோட்டா தயார் நிலையில் இருக்கிறது.

மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க 20 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது’’ என்றவர், ’’பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது என்ன வென்றால், மழை பெய்துவிட்ட நிலையில் தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே அனைவரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மற்றபடி தேவையான அளவில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது’’என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here