தூத்துக்குடியில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்

0
162
geethajeevan

தூத்துக்குடி, நவ.17:

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பலத்த மழையாக பெய்து வருகிறது. இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் சுமார் 122மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.

மாநகரில் பள்ளமான இடங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் உட்பட பல்வேறு இடங்களிலும் குளம் போல தேங்கி கிடக்கும் மழை நீரால் மாநகர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான கீதாஜீவன் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகர பகுதிகளான சூசை நகர், ஜெ.எஸ். நகர், வள்ளிநாயகபுரம், கால்டுவெல் காலனி, ராஜபாண்டி நகர், சுப்பிரமணியபுரம், ஜார்ஜ் ரோடு, பிரையன்ட் நகர் 1,2,3 வது தெருக்களான மேற்கு பகுதி, மாசிலாமணிபுரம், வெற்றிவேல்புரம், ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி ரோடு, கிருஷ்ணராஜபுரம் 7வது தெரு, சன் பீட்டர் கோவில் தெரு, மறக்குடி, திருச்செந்தூர் ரோடு சண்முகபுரம் ரவுண்டானா சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் திருச்செந்தூர் ரோடு, சண்முபுரம் ரவுண்டானா சந்திப்பிலுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். எனவே, இந்தப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி சாலையை சரி செய்திட கீதாஜீவன் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலை துறையினருக்கும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாநகராட்சி என்ஜினீயர் சேர்மகனி, மாநகர நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், உதவி பொறியாளர்கள் தனசிங், இளநிலை பொறியாளர் சரவணன், காந்திமதி, பாண்டி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், வட்ட செயலாளர்கள் சாரதி, சிங்கராஜ், டென்சிங், தெய்வேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜேசையா, ஆர்தர், ஈஸ்வரன், கலாவதி உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here