முட்டளவு தண்ணீரில் மூழ்கியிருக்கிறது செயிண்ட் பீட்டர் கோவில் தெரு

0
133
thoothukudi rain news

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 16 செ.மீட்டர் வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்திருக்கிறது. இதனால் தூத்துக்குடி அண்ணாநகர் அரசு குடியிருப்பு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், செயிண்ட் பீட்டர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமென தேங்கியது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட செயிண்ட் பீட்டர் கோவில் தெருவில் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இத்தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. தற்போது தேங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து உள்ளதால் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், வீடுகளுக்குள் தவளை, பூரான் போன்றவை வந்து விடுவதாகவும் தூர்வாரப்படாத கழிவு நீரோடையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் அப்பகுதியினர் புகார் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ’’அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றி அதனை லசால் பள்ளி எதிரில் உள்ள ஓடையில் கொண்டு செல்லும் வகையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here