பேய்க்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் வழக்கு – உறவினர், சாட்சிகளிடம் சிபிசிஐடி விசாரணை

0
25
cbcid news

சாத்தான்குளம், நவ. 17:

பேய்க்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் , உறவினர் மற்றும் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீர்வாதபுரத்தைச்சேர்ந்தவர் மகேந்திரன் (27) இவரை கடந்த மே மாதம் பேய்குளத்தில் நடந்த ஊராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மகேந்திரனின் சகோதரன் துரைககு பதில் சாத்தான்குளம் போலீஸார் மகேந்திரனை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் கடந்த ஜூன் 13ம் தேதி இறந்தார். இதையடுத்து மகேந்திரன் தாய் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மகன் சாவு குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என மனு அளித்ததையடுத்து உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருககு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி சிபிசிஐடி போலீஸார் தாயார் வடிவு சகோதரி சந்தனமாரி மற்றும் சாட்சிகளிடமும் கடந்த 3மாதத்திற்கு மாதத்திற்கு முன்பு விசாரணை நடத்தினர். அதற்கான அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். இதற்கிடையே சொத்து தகராறு காரணமாக சொககன்குடியிருப்பு இளைஞர் செல்வன் கொலை வழககையும் சிபிசிஐடி போலீசாருககு விசாரிகக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக¢கு தொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிககை நீதிமன்றத்தில் தாககல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் பேய்க்குளத்துககு செவ்வாய்க்கிழமை மதியம் வருகை தந்தனர். பின்னர் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து மகேந்திரன் வழக்கு தொடர்பாக மகேந்திரன் தாயார் வடிவு, சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 6பேரிடம் 2மணி நேரம் மீண்டும் விசாரணை நடத்தி அவர்களது வாககுமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் சொக்கன்குடியிருப்பு செல்வன் வீட்டிற்கு சென்று அவர்களது உறவினர், சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here