கதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்

0
156
theni news

சாத்தான்குளம், நவ. 17:

முதலூரில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியும், அதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுனர் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி சாத்தான்குளம் முதலூர் வீட்ஸ் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி தலைமை வகித்தார். வட்டார தொழிற்நுட்ப மேலாளர் ருக்குமணி வரவேற்றார்.

இதில் வீட்ஸ் இயக்குநர் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முருங்கை தேனீ வளர்ப்பு குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பேசினர். இதில் மத்திய அரசின் கதிர்கிராம தொழில்வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானீயமும் வழங்கப்படுகிறது எனவும், தேனீ வளர்ப்புக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் வீட்ஸ் நிறுவனம் சார்பில் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் லூர்துமணி, வட்டார உதவி தொழிற்நுட்ப மேலாளர் நளினி, உதவி வேலாண்மை அலுவலர் மூனிஸ்வரி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here