திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் – பக்தர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட எஸ்.பி.தகவல்

0
130
murugan kovil

திருச்செந்தூர், நவ. 18

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் நாட்களில் பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாளும் (20ம் தேதி) கோயிலில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் சம்ஹார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் கோயில் தெற்கு நுழைவு வாயில் டோல்கேட்டி பகுதியில் பக்தர்களிடம், சூரசம்ஹார விழாவில் அனுமதி இல்லை என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் ஆகியோர் துண்டுபிரசுரங்களை வழங்கியதோடு விழிப்புணர்வு போர்டு வைத்தனர். பின்னர் எஸ்.பி. ஜெயகுமார் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண விழா நடக்கும் 20ம் மற்றும் 21ம் தேதிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. வழக்கமாக சூரசம்ஹாரம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு சஷ்டி விழா அரசு மற்றம் அறநிலையத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் படி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கொரோனா பரவல் இரண்டாவது கட்டமாக வேகமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் சம்ஹார நிகழ்ச்சிகளை கோயில் யூ டியூப் மற்றும் டி.வி.க்களில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நகரில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் மடங்களில் தங்கியுள்ள பக்தர்கள் 19ம் தேதி மாலையே காலி செய்ய வேண்டும். இவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களுமம், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். லாட்ஜி உரிமையாளர்களும், பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். நகரில் மற்ற ஊர்களுக்கு போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. நகரில் 7 இடங்களிலும் மாவட்ட எல்கை உள்ளிட்ட 15 இடங்களிலும் போலீசார் சோதனை காவடிகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டும் திரும்பி அனுப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங், கோயில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here