திருச்செந்தூர் முருகன் கோவில் யானை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது

0
127
ticr murugan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை லாரியில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமிற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டி பவானி ஆற்றின் கரையில் நடக்கிறது. இம்முகாம் நாளை (15ம் தேதி) துவங்கி 48 நாட்கள் நடக்கிறது. இதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை(22)க்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து யானை தெய்வானை பத்திரமாக லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் காலை 7.20 மணிக்கு லாரியில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றது.

இந்நிகழ்ச்சியில் கோயில் சூப்பிரெண்ட் ராமசுப்பிரமணியம், கட்டுமான உதவி செயற்பொறியாளர் முருகன், கோயில் பணியாளர்கள் ராமசாமி, பால்ராஜ், வேல்முருகன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். யானையுடன் பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில், உதயன் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். யானையுடன் பாதுகாப்பிற்காக கோயில் பணியாளர்கள் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here