காங்கிரஸ் கோரிக்கையை தொடர்ந்து,சடையநேரி கால்வாய்க்கு தாமிரபரணி தண்ணீர் கோரிக்கை வலுக்கிறது..

0
63
congress

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து சடையநேரி கால்வாய்க்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரில் ஒருபகுதியை திருப்ப வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் ஓடுகிற தண்ணீரில் ஒரு பகுதியை மாவட்டத்தின் தென் பகுதிக்கான சடையனேரி கால்வாக்கு திருப்ப வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அரசு நிர்வாகமும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் மக்களின் கோரிக்கை நிறைவேறியபாடு இல்லை.

வழக்கமான அந்த கோரிக்கை, வழக்கம்போல் மறந்துவிடபட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் டி.டி.கே.கார்த்திக்ராஜா, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தார். அந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது தெற்குமாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்து வருகிறார். அதுபோல் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு கொடுத்து சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இப்படியாக பல தரப்பிலிருந்தும் அக்கோரிக்கை வலுத்து வருகிறது.

வரும் திங்கள் கிழமை மனுநீதி நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்க விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ கடலுக்கு போகும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் ஒரு பகுதி, சடையநேரி கால்வாய் வழியாக தென் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களை வாழ வைத்தால், அதுபோதும். அதையே கோரிக்கை வைப்போர் வலியுறுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here