தடைசெய்யப்பட்ட தீவுக்குள் சென்ற தருவைகுளம் மீனவர்கள் 10 பேர் கைது

0
35
fisherman 10 arrust

தடைசெய்யப்பட்ட தீவுக்குள் சென்றதாக தருவைகுளம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து கடந்த ஐந்தாம் தேதி மீன்பிடிக்க சென்ற தருவைக்குளம் மரியகுணசேகரன் மகன் ஜான்சன் (படகு ஓட்டுனர்), சேயராஜன், அந்தோணிராஜ்,தீபன், ஜோசப், வேம்பார் வின்சன், சின்ராஜ், சிலுவைபட்டி அந்தோணிபிச்சை, விஜய் மற்றும் நெல்லை இடிந்தகரை ரோஸ்டன் ஆகிய பத்து மீனவர்கள், மாலத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவு என்னும் தடைசெய்யப்பட்ட கடல் பகுதிக்கு சென்றனராம்.

கடந்த 17-ஆம் தேதி மினிகாய் தீவில் இருந்த அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் இந்திய கடலோர காவல்படையினர் மேற்படி மீனவர்கள் மற்றும் படகை மினிகாய் தீவு கடல் காவல்நிலைய பொறுப்பில் ஒப்படைத்து தங்கவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here