தூத்துக்குடி சிவன் கோவிலில் சூரசம்ஹார விழா – முன்னதாகவே கோவிலை பூட்டியதால் பக்தர்கள் தவிப்பு

0
51
thoothukudi sivan kovil

தூத்துக்குடி, நவ.20:

தூத்துக்குடி சிவன் கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. அதிக அளவில் பக்தர்கள் கூடியதால் விழா நடப்பதற்கு முன்பாகவே கோவிலை போலீசார் பூட்டினர். இதனால் கோவிலுக்குள் போக முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் மாலை 4மணிக்குமேல் சூரசம்ஹார விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே கோவில் வளாகத்துக்குள் அதிகமானோர் கூடிவிட்டதால், மாலை 3மணியளவில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் சேருவதை தடுத்திடும் பொருட்டு போலீசார் கோவிலை பூட்டினர். இதற்கிடையே இதனை அறியாத பக்தர்கள் அறிவிக்கபட்ட நேரத்தை எதிர்பார்த்து வந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியில் தவித்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் ஏற்கனவே அதிக அளவு பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் இருப்பதால் இடநெருக்கடி ஏற்படும் என கொரோனாவை காரணமாக சொல்லி மறுத்தனர். ஆனாலும் பக்தர்கள் அங்கேயே நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே திட்டமிட்டபடி கோவிலின் உள்ளே உள்ள பிரகாரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை உள்ளே இருந்தவர்கள் மட்டும் கண்டு களித்தனர். போலீசார் கதவை மூடியதால் மற்ற பக்தர்கள் விழாவினை காண முடியாமல் தவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here